ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!

Report Print Vethu Vethu in அரசியல்

புதிய திட்டங்களை வெகுவிரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் போது அதற்கு பொறுப்பு கூறுபவர்களிடம் அனுமதி பெறுவதற்கு ஏற்படும் தாமதத்தை குறைக்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ள அனைத்து திட்டங்களுக்கும் ஒரே இடத்தில் அனுமதி பெற கூடிய வகையில் அலுவலகம் ஒன்று நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் நடவடிக்கை மேற்கொள்வதன் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் நெருக்கமாக செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கமாகியுள்ளது.