2023ஆம் ஆண்டு வரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக செயற்படும் ரணில்

Report Print Vethu Vethu in அரசியல்

2023ஆம் ஆண்டு வரையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படாதென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியல் யாப்பிற்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவார்.

எனினும் கடந்த ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி சுகததாஸ உள்ளகரங்கில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் விசேட யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இதில் மூன்றாவது யோசனையாக செயற்குழுவினால் எதிர்வரும் காலங்களுக்கான கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கமைய அந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க கட்சி தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவிலை என்றால் அவரே விலகும் வரை அவரை நீக்க முடியாதென்பதே அந்த யோசனையாகும்.

எப்படியிருப்பினும் எதிர்க்கட்சி தலைவராக சஜித் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைமைத்துவத்தையும் அவருக்கே வழங்க வேண்டும் என சஜித் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அது கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தல் காலப்பகுதியில் மாத்திரம் கட்சியின் தலைமைத்துவம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டு தேர்தலின் பின்னர் ரணிலுக்கே கிடைக்கும் என கூறப்படுகின்றது.