சிற்றூழியர் நியமனங்களுக்கு நிதியமைச்சு தடைவிதிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

சிற்றூழியர் நியமனங்களை அமைச்சர்கள் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு இதற்கான உத்தரவை விடுத்துள்ளது.

அமைச்சர்கள் தமது ஆதரவாளர்களுக்கு பதவிகளை வழங்கும் செயற்பாட்டை தடுக்கும் வகையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள், சிற்றூழியர்கள், காரியாலய உதவியாளர்கள், காவலாளிகள் போன்ற பதவிகள் இதில் உள்ளடங்குகின்றன.

இந்தநிலையில் குறித்த நியமனங்கள் திறைசேரியின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நிதியமைச்சு உத்தரவிடப்பட்டுள்ளது.

நியமனங்களுக்கான செலவைக் குறைக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.