கோட்டாபயவுக்காக திட்டமிடப்பட்ட நாடகம்! சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டு பணியாளர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் அனைத்து தகவல்களும், இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக திட்டமிடப்பட்ட நாடகமாகும்.

அதனை நாங்கள் கண்டறிந்து, இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விளக்கமளித்துள்ளோம். இதேவேளை, வெள்ளை வான் தொடர்பான ஊடக சந்திப்பு ஒரு நாடகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.