ஜனாதிபதி தமிழர்களின் மனதை வெல்லும் வகையில் செயற்பட வேண்டும்! மைத்திரி வலியுறுத்தல்

Report Print Rakesh in அரசியல்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மனதை வெல்லும் வகையில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச மாபெரும் வெற்றியடைந்தாலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவர் படுதோல்வியடைந்துள்ளார். அதற்கான காரணங்களை அவர் ஆராய வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களே பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றார்கள். அங்கு வாழும் தமிழ் மக்களின் மனதை வெல்லும் வகையில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும்.

இந்த நாட்டில் நாம் நிலைநாட்டிய நல்லிணக்கத்தை அவர் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...