தமிழரசுக் கட்சி 70ஆவது ஆண்டு விழா கொண்டாடுவது துரோகமானது! வீ.அனந்தசங்கரி

Report Print Malar in அரசியல்

தற்போதைய தமிழரசுக் கட்சி தந்தை செல்வாவின் பெயரில 70ஆவது ஆண்டு விழா கொண்டாடுவது மிகவும் துரோகமானது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.அனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,

தந்தை செல்வாவின் இறுதி ஆசை தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் இயங்க வேண்டும் என்பதே.

அதனால்தான் 28 வருட உட் பகைகளை மறந்து ஜீ.ஜீ.பொன்னம்பலத்திடம் சென்று தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவர்களாக இருந்ததுடன் தமது பழைய கட்சிகளைப் பற்றி எண்ணாமல் மறந்துவிட்டார்கள்.

அதன்பின் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இயற்கை அடைந்தார்கள். அந்த இரு பெரும் தலைவர்களுக்குச் செய்யும் துரோகமாகவே தமிழரசுக் கட்சி மீள்உருவாக்கம் பெற்றது.

ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்ட கட்சியை உடைத்துவிட்டு தமிழரசுக் கட்சியை மீளஉருவாக்கிக் கண்ட பலன் என்ன?

தமிழரசுக் கட்சியின் சாதனைகள் எவை என்றால்,

1 தமிழர் விடுதலைக் கூட்டணிக் காலத்தில் இணைந்திருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை தமிழரசுக் கட்சிக் காலத்தில் பிரிக்கப்பட்டது.

2. கூட்டணியின் காலத்தில் பலமாக இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு 2004 - 2009இற்குள் அழிக்கப்பட்டது. இதனைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

3. பல கட்சிகள் புதிதாக ஆரம்பிக்கப்படுவதற்கும் இன்றைய தமிழரசுக் கட்சியே காரணமாக இருக்கிறது.

சகல மக்களையும் ஒன்றுபட வைத்த தந்தை செல்வாவிற்கு இது ஒரு துரோகமான செயல் அல்லவா என்பதை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...