பொதுத்தேர்தலுக்கு தயாராகும் சஜித்! கட்சியில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது

Report Print Varun in அரசியல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அதிகளவான ஆசனங்களை பெற்று ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெற செய்வதற்கு தம்மால் முடிந்த முயற்சிகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பதவிகளுக்காக சண்டை செய்துகொண்டு கட்சியை பிளவுபடுத்த எவராலும் முடியாது என அவர் இன்று கொலன்னாவ தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறினார் .

இன்று ஆளும் கட்சியினர் எம்மை மக்களிடமிருந்து பிரிப்பதற்கு பல்வேறு விதங்களில் எமக்கு எதிராக சேறு பூசுகிறார்கள்.

எவ்வளவு சேறு பூசினாலும் எம்மை இல்லாமலாக்க முடியாது எனவும் எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க தாம் தயார் எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்;

அதேபோல ஜனாதிபதி தேர்தலின்போது காணப்படாத அளவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிகொள்ள ஆளும் தரப்பினர் முயற்சி எடுக்கிறார்கள். எம்மீது மக்களுக்கு வெறுப்பு வரும்படி சதிசெய்கிறார்கள். என்ன சதி செய்தாலும் மக்களுக்கும் எமக்கும் இருக்கும் நம்பிக்கையை இல்லாமல் செய்ய முடியாது. நாம் எந்த சந்தர்ப்பத்திலும் மக்களோடு கைகோர்த்து மக்களுக்காகவே வாழ்கின்றோம். அது நாளைக்கும் எதிர்வரும் காலங்களிலும் அவ்வாறே அமையும்.

Latest Offers

loading...