பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கை விலக வேண்டும் - ஓமல்பே சோபித தேரர்

Report Print Kamel Kamel in அரசியல்

பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கை விலகிக் கொள்ள வேண்டுமென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இரண்டு தேசங்களை உருவாக்குதல் உள்ளிட்ட புலம்பெயர் தமிழர்களின் தேவைகளுக்காக குரல் கொடுக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இலங்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

எம்பிலிபிட்டியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை குறித்து பிரித்தானிய பிரதமருக்கு இருக்கும் கரிசனை மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு இருக்கும் வலி என்ன என்பது பிரச்சினையாகும்.

பொரிஸ் ஜோன்சனின் கொள்கைகளின் மூலம் இன்னமும் அவர் இலங்கையை பிரித்தானிய காலணித்துவ நாடாகவே கருதுகின்றார் என தென்படுகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியில் பொதுநலவாய நாடுகள் அமப்பில் தொடர்ந்தும் நீடிப்பது எவ்வளவு நியாயமானது என்பதனை சிந்தித்து பார்க்க வேண்டும்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பானது பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும்.

இலங்கை தொடர்ந்து பிரித்தானியாவின் காலணித்துவ நாடு இல்லை என்பதனை உணர்த்த வேண்டுமாயின் பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கை விலகிக்கொள்ள வேண்டுமென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.