இலங்கை தமிழ் அகதிகள் தாயகம் திரும்ப வேண்டும்! எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்தியாவில் நிறைவேற்றும் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என நான் கருத்து கூற முடியாது. அது இந்தியா தனது நலன் கருதி கொண்டுவரப்படும் சட்டங்கள். இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் இங்கே வர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இந்தியாவில் தொடர்ந்து அவர்கள் தங்கியிருக்க வேண்டும் எனும் நிலைப்பாடு அவர்களுக்கு இருந்தால் சர்வதேச சட்டத்தின் கீழ் அதனை சுயாதீனமாக தெரிவு செய்யும் உரிமை அவர்களிடம் உண்டு.

அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். குடியேற வந்தவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

நாங்கள் ஆதரவு தெரிவித்த அரசாங்கம் கூட அதனை செய்ய தவறி இருந்தது. எனினும், அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பல முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.

நாடு திரும்புவர்கள் வாழ்வதற்கான வசதிகளை மாத்திரம் செய்து கொடுக்காது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிகளை செய்வதற்கு தொடர்ந்தும் நாங்கள் வலியுறுத்துவோம். என தெரிவித்தார்.

Latest Offers

loading...