பொது தேர்தலில் களமிறங்கும் மைத்திரி!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும், நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சியை மைத்திரிபால சிறிசேனவே வழிநடத்துவார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோகன லக்ஸ்மன் பியதாச கூறுகின்றார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பொதுக் கூட்டணியாக களமிறங்கும். சின்னமும் பொதுவான ஒன்றாக இருக்கும்.

நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே நாம் கூறியுள்ளோம். எவ்வாறு இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Latest Offers

loading...