வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரிச் சலுகைகள்! கெஹலிய ரம்புக்வெல்ல

Report Print Jeslin Jeslin in அரசியல்

அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வரிச் சலுகைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில்,

முதலீடுகளை மேம்படுத்துவதற்காக முதலீடுகளின் அளவைப் பொறுத்து பலவிதமான சலுகைகள் அறிமுகப்படுத்தப்படும்.

அத்தோடு சலுகைகள் எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்து நிதி அமைச்சுடன் ஒப்பந்தம் எட்டப்படும்.

மேலும் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் பெற முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்படும் அதிகாரிகள் குழுவை அறிமுகப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலகளவில் விளம்பர பிரச்சாரத்தை மேற்கொள்ள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers