ராஜித சேனாரத்ன மீது துரித விசாரணை நடத்தப்பட வேண்டும்!

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது துரித விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் பணியாளர் விவகாரத்தில், உள்நாட்டு நீதிக்கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுவதை ஜனாதிபதி சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“வெள்ளை வான் சாரதிகள் என அடையாளப்படுத்திக்கொண்ட அந்த சந்தேக நபர்களுக்கு யார் பணம் கொடுத்தது என்பது குறித்து நீதிமன்றத்தில் கேட்கப்படாவிட்டாலும் பூசணித்திருடனை தோளில் கண்டுபிடிக்கலாம் என்றபடி, அதனுடன் சம்பந்தப்பட்டவர் ராஜித சேனாரத்னதான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

இந்த சம்பவத்தின் பின்னர் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் உருவெடுத்துவிட்டது என்ற விடயத்தை ராஜித சேனாரத்னதான் அடிக்கடி ஊடகங்களுக்கு முன்பாக கூறிவந்தவர்.

சுவிட்ஸர்லாந்து தூதரகப் பெண் விவகாரத்திலும் அதேபோல, வெள்ளைவான் சாரதிகள் விடயத்திலும் அவர்களுக்கு பணம் வழங்கியது யார் என்ற விடயம் மக்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

அதனால்தான், இந்த சம்பவம் தொடர்பாக நான் கூறுவது என்னவென்றால், சுவிட்ஸர்லாந்து தூதரகப் பணிப்பெண் கடத்தல் நாடகத்தில் நடித்தவர்களை மட்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் மட்டும் போதாது.

அதற்குப் பிண்ணயில் ஐக்கிய தேசியக் கட்சியும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இருந்திருக்கலாம், பிரதானமாக ராஜித சேனாரத்ன இருப்பது குறித்து நிச்சயம் விசாரணை அவசியம்.

மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்று ஆட்சிக்குவந்த அரசாங்கத்தின் மீது அதிரடியாக முன்வைக்கப்பட்ட சேறுபூசலே இந்த சம்பவங்களாகும்.

அதுகுறித்து முறையான விசாரணை செய்யாவிட்டால் அல்லது இது சுவிஸ் அரசாங்கத்துடனான விடயம் என்பதால் சர்வதேசத்துடன் முட்டிமோதக்கூடாது என்று நினைத்து விசாரணைகளை ஸ்தம்பிதப்படுத்தினால் ஆரம்பித்த நேரத்திலிருந்தே அரசாங்கம் மீது சர்வதேசத்திலிருந்து சேறுபூசுதல்கள் மேற்கொள்ளப்படும்.

எனவே கடந்த அரசாங்கத்தைப் போன்று பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு போன்ற நிறுவனங்கள் ஊடாக அரசியல் பழிவாங்கலைப் போன்று அல்லாமல் உள்நாட்டிலுள்ள சட்டக்கட்டமைப்புக்களை வைத்து சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு இன்று அந்த சேறுபூசுதல்கள் தடுக்கப்பட்டன.

ராஜித சேனாரத்ன மீது விசாரணை நடத்தினால்தான் சந்தேக நபர்களுக்கு எவ்வாறு பணம் கொடுக்கப்பட்டது? எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பது குறித்த உண்மைத் தகவல்கள் மக்களுக்கு முன்பாக வெளிகொணரப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...