முழுப்பலத்துடன் களமிறங்க தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முழு பலத்துடன் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

அதற்கான கூட்டு நடவடிக்கைகள், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்வரும் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறந்த ஒத்துழைப்பை வழங்கியது.

தற்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கதிரைச் சின்னத்தின் கீழ் பரந்த கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும், பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர் கட்சியின் தலைவர் என்பதால், அந்த ஒப்பந்தம் ஒருபோதும் மாற்றமடையாதென ரோஹன லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டார்.

Latest Offers

loading...