பொதுத் தேர்தலில் ரெலோ, புளொட், இலங்கை தமிழரசுக்கட்சி இணைய முடிவு

Report Print Banu in அரசியல்

பொதுத் தேர்தல் தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றைய தினம் சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ரெலோ, புளொட் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

கலந்துரையாடல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கருத்துதெரிவிக்கையில்,

ரெலோ, புளொட் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டாக இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒருமித்து, ஒற்றுமையாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Latest Offers

loading...