கிளிநொச்சியிலும் வர்ணம் தீட்டும் பணிகள் இன்று ஆரம்பம்

Report Print Suman Suman in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் யோசனைக்கமைய நாடளாவிய ரீதியாக பல்வேறு மாவட்டங்களில் தங்கள் மாவட்டத்தை அழகுபடுத்தும் நோக்கோடு இளைஞர் குழுக்கள் இணைந்து வர்ணம் பூசும் வேலைகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன இளைஞர் குழுவொன்று வர்ணம்பூசும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தை சுத்தம் செய்து வர்ணம் பூசும் வேலைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாளை முதல் கிளிநொச்சியிலும் வர்ணம் தீட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற இருப்பதினால் மாவட்டத்தில் அக்கறை உள்ள இளைஞர்கள் யுவதிகள் காலை 9 மணி முதல் வர்ணம் பூசும் பணியில் இணைந்து கொள்ளுமாறு கிளிநொச்சியின் சுயாதீன இளைஞர் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளார்.

Latest Offers

loading...