தமிழர் விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியாமல் தடுமாறும் ஜனாதிபதி! சுமந்திரன் எம்.பி தகவல்

Report Print Rakesh in அரசியல்

வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் உட்பட தமிழ் மக்களின் பல விடயங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானம் எடுக்க முடியாமல் தடுமாறி கொண்டிருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்து வந்தார். ஆனால், வடக்குக்கு இதுவரை ஆளுநர் நியமிக்கப்படவில்லை.

வடக்கு மாகாணத்துக்கு ஆளுநர் ஒருவரை இன்னமும் நியமிக்க முடியாமல் தடுமாறி கொண்டிருக்கும் புதிய ஜனாதிபதியை தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம்.

வடக்கு ஆளுநர் விடயம் உட்பட தமிழ் மக்களின் பல விடயங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய தீர்மானம் எடுக்க முடியாமல் தடுமாறி கொண்டிருப்பது தெரிகின்றது. ஆகவே, அவர் தனக்குரிய ஒருவரை முதலில் ஆளுநராக நியமிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Offers