ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்! அத்துரலியே ரதன கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

மட்டக்களப்பு பல்கலைக்கழக தலைவர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கத்திடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் நிதி மோசடிகளுக்கு எதிரான பொலிஸால் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

எனவே புதிய அரசாங்கத்தின்கீழ் பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என்றும் ரதன தேரர் கோரியுள்ளார். குறித்த பல்கலைக்கழக அமைப்புக்காக பாரியளவு வெளிநாட்டு நிதியுதவி கிடைத்துள்ளது.

இதன் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை உருவாக்க ஹிஸ்புல்லாஹ் திட்டமிட்டதாகவும் ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...