இலங்கைக்கு கடன் வழங்க உலக வங்கி இணக்கம்

Report Print Kanmani in அரசியல்

நாட்டின் அரச நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் வௌிப்படைத்தன்மையை ஏற்படுத்தல் என்பனவற்றுக்காக இலங்கைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.

இதற்கான 5 வருட திட்டத்தின் முக்கிய விடயங்களாக தகவல் தொழில்நுட்ப பாவனை மற்றும் மனித வள திறன் அபிவிருத்தி என்பன இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரச நிறுவனங்களின் பொறுப்புக்களை உறுதிப்படுத்துவதற்காகவும் கடனுதவி வழங்கப்படுவதாக உலக வங்கி கூறியுள்ளது.

Latest Offers