நல்ல விடயங்களுக்காக அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம்! சஜித் பிரேமதாச

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதிக்கு பொதுமக்கள் வழங்கியுள்ள ஆணை, நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வது எதிர்க்கட்சியின் பொறுப்பு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்களுக்கு வாக்குறுதியளித்த நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் பூரண ஆதரவை பெற்றுக்கொடுப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தனகல பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“எதிர்க்கட்சி நாடாளுனமறத்திற்கு புதிய தோற்றத்துடன் வரும், பாரம்பரிய எதிர்க்கட்சியாக இருக்க முயற்சிக்காது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த பொதுமக்களின் கொள்கைகளை எதிர்க்கட்சி உறுதி செய்யும்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பலமுள்ள எதிர்க்கட்சியாக செயற்பட்டு நாட்டினதும், மக்களினதும் நன்மையான விடயங்களுக்கு அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

எதிர்க்கட்சி என்ற காரணத்துக்காக அரசாங்கம் முன்வைக்கும் அனைத்து விடயங்களையும் எதிர்க்கும் குரோத அரசியலை நாங்கள் செய்யப்போவதில்லை.

அதேசமயம், நாட்டுக்கும் பாதிப்பான எந்த தீர்மானங்களை கொண்டுவந்தாலும் அதனை நிராகரிப்பதுடன் அதற்கெதிராக போராடுவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

Latest Offers

loading...