ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் திருத்தம்? அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், இது அரசாங்கத்தின் மீது கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்தியது.

கடந்த 10 ஆண்டுகளில், ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலானோர் போட்டியிட்டிருந்தனர்.

பிரதான வேட்பாளர்கள் மூவரை தவிர ஏனையவர்களால் 0.1 சதவீத வாக்குகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிபாரிசுகளை தயாரிக்குமாறு இதன்போது அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் தேர்தல் ஆணைக்குழுவும் பாரிய சிரமத்தை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.” என கூறியுள்ளார்.

Latest Offers

loading...