கட்சி தலைமை பதவியை ஏற்க இருப்பவர்களிடம் ரணில் முன்வைத்துள்ள கோரிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க காத்திருப்பவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட தயாராக இருக்க வேண்டும் என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், கட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சித்தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடிய ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“2020 ஏப்ரல் மாத இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறியமுடிகிறது. இந்நிலையில், கட்சியின் மீள் ஒருங்கிணைப்புப் பணிகளை ஜனவரி மாத முற்பகுதியில் ஆரம்பித்து, பெப்ரவரி மாத இறுதியில் நிறைவிற்கு கொண்டுவர வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கென எதிர்காலம் ஒன்று உண்டு. அனைவரும் அந்த எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை வையுங்கள். அதனை நோக்கிய பயணத்திற்கு முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதே எமது பொறுப்பாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள யாரும் சதி வலையில் சிக்கிக்கொள்ள கூடாது. கட்சியை வெற்றி நோக்கி கொண்டு செல்வதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

எவ்வாறாயினும், கட்சியன் சில உறுப்பினர்கள் சதி வலையில் சிக்கிக்கொண்டிருப்பதாக தெரிகின்றது. எனினும், இது போன்ற விடயங்கள் ஒருபோதும் நடக்க கூடாது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...