இலக்க தகடு அகற்ற சொகுசு வாகனத்தில் சம்பிக்கவை பார்க்க சென்ற நபர் யார்?

Report Print Vethu Vethu in அரசியல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை பார்ப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்ற உறுப்பினரால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த உறுப்பினர் அதி நவீன காரில் இலக்க தகடு இல்லாமல் சென்றமையே இந்த குழப்பத்திற்கு காரணமாகியுள்ளது.

பின்னர் ஆராய்ந்த போது அது நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனியின் கார் என தெரியவந்துள்ளது.

அந்த மோட்டார் வாகனம் பதிவு எண் மற்றும் இலக்க தகடு இல்லாமல் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.