சம்பந்தன் மீது குற்றம் சுமத்திய அனந்தி

Report Print Tamilini in அரசியல்

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்று தலைமை வரக்கூடாது என்ற எண்ணப்பாட்டில் இருப்பதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் மணல் அகழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசியல் தலைமைகள் கைது செய்யப்படுகின்ற போது குரல் எழுப்புகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் யுத்தத்தை நிறுத்துமாறு ஒரு போதும் குரல் எழுப்பவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Latest Offers

loading...