வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பியுங்கள்: சஜித்

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக உடனடியாக புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு வெற்றி பெற்ற தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கம்பஹா, கிரில்லவெல பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சியினருடனான சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும் அரசாங்கம் தாக்கல் செய்யும் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க மாட்டோம். அப்படியான அரசியலில் நான் ஈடுபட மாட்டேன். எனினும், அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது.

சமூர்த்தி நிவாரணங்களுக்கு மேலதிகமாக உணவு பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படும் எனக் கூறினார்கள். அதனை தற்போது பலர் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

நாம் செய்ய வேண்டியது பாசாங்குத்தனமான அரசியல் அல்ல. நாடாளுமன்றத்திற்கு சென்று அதனை விமர்சிக்கக் கூடாது. இரண்டு கைகளையும் தூக்கி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

69 இலட்சம் மக்கள் அங்கீகரித்த கொள்கையை அமுல்படுத்த தேவையான நிதி யோசனைகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் போது மூன்றில் இரண்டு அல்ல, ஆறில் 5 அல்ல, ஆறில் ஆறு பொரும்பான்மை வாக்குகளை வழங்கி அவற்றை நிறைவேற்ற தயார்.

ஒரு நிபந்தனை, இந்த நிவாரணங்கள் பொதுத் தேர்தலுக்கு பின்னரும் செல்லுப்படியானதாக இருக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.