பழிவாங்கும் போது சுகமாக இருக்கும் ஆனால் பின்னர் எரியும்! விஜித் விஜயமுனி சொய்சா

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் 69 இலட்சம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று வேண்டுமே அன்றி பழைய போக்குவரத்து வழக்குகளை தூசி தட்டி எடுப்பதை அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நேற்று வெலிகடை சிறைக்கு சென்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

பழிவாங்கும் போது நல்ல சுகமாக இருக்கும். உடலில் ஏற்பட்ட சொறியை சொரியும் போது சுகமாக இருக்கும். ஆனால் பின்னர் எரியும். 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பு.

அதனை விடுத்து போக்குவரத்து வழக்கு போன்ற பழைய குப்பைகளை தோண்டுவதில் பயனில்லை. நாட்டில் வாகன விபத்துக்களில் ஆட்கள் இறந்துள்ளனர். இறக்காமல் இருந்ததில்லை. இறந்துள்ளனர்.

அந்த சம்பவங்கள் போக்குவரத்து வழக்கு நடவடிக்கைகளாகவே கையாளப்படும் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.