விக்னேஸ்வரன் கருத்தை திரும்பப் பெற வேண்டும்!

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை பௌத்த நாடு அல்ல என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என காலி சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

ஊடக சந்திப்பொன்றை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தினர் இதனைக் கூறியுள்ளனர்.

விக்னேஸ்வரனின் கருத்தை கண்டிப்பதாகவும், அமைதியாக இருக்கும் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டி யுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்கும் மூடதனமான கருத்து எனவும் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணி பிரேமரத்ன திரானகம தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மிலேச்ச ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கருத்துக்களை வெளியிடாது அமைதி காத்த விக்னேஸ்வரன், நாட்டில் இனங்கள், மதங்கள் இடையில் உருவாகி வரும் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பௌத்த நாடு தொடர்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இல்லாமல் போயுள்ள தனது அரசியல் விம்பத்தை கட்டியெழுப்புவதற்காகவே அவர் இதனைக் கூறியுள்ளார் எனவும் பிரேமரத்ன திரானகம குறிப்பிட்டுள்ளார்.

பரலோகம் சென்றுள்ள இனவாதி பிரபாகரனின் இடத்தை பெற விக்னேஸ்வரன் தயாராகி வருகிறார் என சட்டத்தரணி ஜயந்த குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இனவாதத்தை தூண்டி எதிர்வரும் தேர்தலில் வாக்குகளை பெற முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அது மாத்திரமல்ல அமைதியான தமிழ் மக்கள் இந்த பொறியில் விழுவதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.