மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் நடவடிக்கையே தற்போது நடைபெற்று வருகிறது! திலகர் எம்.பி

Report Print Gokulan Gokulan in அரசியல்

நான்கரை வருடமாக நாங்கள் செய்த அபிவிருத்தி வேலைகளை திறந்து வைக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலகர் எம்.பி தெரிவித்துள்ளார்.

ஆனால், அண்மையில் அமைச்சராகிய ஒருவர் அதனை பூட்டும் வேலைகளையே செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மறே தோட்டத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளோம்.

ஆகவே தான் நாங்கள் துணிவோடு மக்கள் மத்தியில் சென்று, நாங்கள் செய்த அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்து வருகின்றோம்.

மக்கள் பிரதநிதி என்போர் மக்கள் நலத்திட்டங்களை செய்து திறந்து வைக்க வேண்டும். மாறாக அதனை தடுக்கும் நடவடிக்கையே தற்போது இடம்பெறுகிறது.

மஸ்கெலியா மைதானத்தை நாங்கள் 90 லட்சம் ரூபா நிதியில் அபிவிருத்தி செய்ததோம்.

அதை திறந்து வைக்க முற்பட்டபோது விழாவை தடுக்க புதிய அமைச்சரொருவர் மைதானத்தின் நுழைவாயிலில் பூட்டு போடுகிறார் என தெரிவித்துள்ளார்.