சம்பிக்கவின் கைது அரசியல் பழிவாங்கல்: ஜே.வி.பி

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே. டி. லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நடு இரவில் வந்து சம்பிக்கவை கைது செய்ய எந்த தேவையும் இல்லை. எதனையும் செய்ய ஒரு நடைமுறை இருக்கின்றது.

இதற்கு மாற இது நடந்துள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறியிருந்தால் அவர் வந்திருப்பார். இது அரசியலை அடிப்படையாகக் கொண்டது என்பது தெரிகிறது. கட்டாயம் இது அரசியல் பழிவாங்கல் அல்லது அரசியல் அழுத்தம்.

அதேபோல் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தகவல்கள், சாட்சியங்களை பெறுவது எதுவாக இருந்தாலும் கடத்தல் நிச்சயம் நடந்துள்ளது எனவும் லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.