கோட்டாபயவுடன் இணையும் சஜித் பிரேமதாச..? நெருங்கிய சகா அறிவிப்பு

Report Print Kanmani in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சஜித் பிரேமதாச இணைந்து நாட்டை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

2020 பொதுத் தேர்தலில் தமது கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது.பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப் பெற்று, சஜித் பிரேமதாஸ பிரதமராவதற்கான சூழ்நிலை அதிகமாகக் காணப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச வரவேண்டும் என்பதையே பெரும்பான்மையான கட்சியின் உறுப்பினர்கள் விரும்புவதாகவும் எனவே, இதற்கு செவி சாய்த்து ரணில் விக்ரமசிங்க முடிவொன்றை எடுக்க வேண்டும்.

இந்த தகவலை நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அறிவித்துள்ளோம். எனவே, நாம் இந்த விடயத்தில் எமது தலைவர் சிறப்பான முடிவொன்றை எடுப்பார் என்றே நம்புகிறோம்.ஓய்வுப் பெருவார் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம். இதன் ஊடாக, ஏப்ரலில் வரும் பொதுத் தேர்தலுக்கும் நாம் ஆயத்தமாக இலகுவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.