ஜனாதிபதி கோட்டாபய மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இருவரும் சந்திப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படுவது தொடர்பில் இருவரும் பேசியுள்ளனர்.

சிறிசேனவுடன் கோட்டாபய ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த அதேவேளை சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அலரி மாளிகையில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு சிறிசேன பொது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் காலையில் இடியப்பம் உண்டார் என்ற தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.