சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம்! இலங்கை வரும் சுவிஸ் இராஜதந்திரி

Report Print Jeslin Jeslin in அரசியல்

சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.

எனினும் இந்த விடயம் இன்னும் ராஜதந்திர ரீதியில் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.

இதனையடுத்தே சுவிஸின் ராஜதந்திரி ஒருவர் இலங்கைக்கு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் சுவிஸ் அதிகாரிகள் இறுதியாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தபோது இலங்கையின் ஊடகங்கள் இந்த விடயத்தில் பக்கசார்பாக நடந்துக்கொள்கின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எனினும் இது இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட செயலல்ல. இலங்கையின் ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுவதன் காரணமாக இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தலையிடுவதில்லை என்ற கருத்தை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.