ஏப்ரல் நடுப்பகுதியில் பொதுத் தேர்தல்! நிமல் தெரிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

மார்ச் மாதம் 3ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும், ஏப்ரல் நடுப்பகுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஓரணியில் நின்று போட்டியிடும்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் பேச்சு நடத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.