வட மாகாண ஆளுநரை நியமிப்பதில் தொடரும் குழப்பம்! அமைச்சரவையில் நேற்று நடந்தது என்ன?

Report Print Vethu Vethu in அரசியல்

புதிய அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வட மாகாண ஆளுநர் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்படும் பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண ஆளுநராக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது.

எனினும் திருமதி சாள்ஸின் வயது 60ஐ பூர்த்தியாகுவதற்காக இன்னமும் 2 மாத காலங்கள் உள்ளது. எனவே அவரை ஆளுநராக நியமிக்கும் போது முழுமையான ஓய்வூதியம் வழங்கும் போது சிக்கல் நிலை ஏற்படும் என அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விசேட சந்தர்ப்பமாக கருதி அவருக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்கும் வகையில் குறித்த நியமிப்பு மேற்கொள்வதற்கு அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது.

Latest Offers

loading...