ஜனாதிபதியின் முயற்சியை எதிர்க்க தயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி! பெரும்பான்மை யாருக்கு?

Report Print Varun in அரசியல்

எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடிய பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை கலைப்பாராயின் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க இதனை தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜனவரி மாதம் 3ம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் அன்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமக்கு தெரிய வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி 52 நாள் அரசாங்கத்தை பதவியில் அமர்த்தினார்.

அந்த சமயம், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்து 52 நாள் அரசாங்கத்தை துரத்தியடித்ததாக ஆஷு மாரசிங்க கூறினார்.

எனவே ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்படுமாயின் அதற்கு எதிராக தமது கட்சி நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்து ஜனாதிபதியின் முயற்சியை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் மாத இறுதியில் பொது தேர்தலை நடத்துவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...