நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் பொது தேர்தல் முடிவுகளுக்கு அமைய யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது

ஐக்கிய தேசிய முன்னணிக்கு 113 ஆசன அதிகாரத்தை காட்டுவதற்கான தேவை ஏற்பட்டால் தாம் அவர்களுக்கு ஆதரவு வழங்க தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தற்போதுள்ள உறுப்பினர்களை விடவும் அதிக உறுப்பினர்கள் உரிய முறையில் கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

இந்த மகத்தான வெற்றியின் மூலம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூட்டமைப்பிற்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டதாக ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Latest Offers

loading...