ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஹக்கீம், ரிஷாட்டிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. நடவடிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் சாட்சியங்களை பதிவு செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் போதே இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இதேவேளை இந்த வழக்கில் முன்னாள் செயலாளர்கள் இன்னும் சாட்சியங்களுக்காக தம்மிடம் சமூகமளிக்கவில்லை என்று இன்று நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.