சமகால அரசாங்கம் தொடர்பில் அம்பிட்டிய சுமனரதன தேரர் குற்றச்சாட்டு!

Report Print Murali Murali in அரசியல்

தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே, கைது நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாம் எதிர்ப்பார்த்ததை விட பல விடயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். கடந்த அரசாங்கத்தில் மற்றைய தரப்பினர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தற்போது, இந்த அரசாங்கமும் அதே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், மகா வீரர்களை போன்று, பல்வேறு விடயங்களை, பல்வேறு விதத்தில் சமூகமயப்படுத்து முயற்சிக்கின்றனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.