மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை தமிழர்கள் எவரும் கொல்லப்படவில்லை! எச்.ராஜா

Report Print Murali Murali in அரசியல்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் பாஜகவுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என அக்கட்சியின் தேசிய செயலாளார் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பாஜகவை பொருத்தவரை இலங்கை தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நிலையில் உறுதியாக உள்ளது. முந்தைய ஆட்சிக்காலத்தில் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் ஒரு தமிழர் கூட கொல்லப்படவில்லை. அதேபோல், ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை.

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் மற்றும் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசி, இலங்கை தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுப்பதில் நமக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை.

இப்போது தமிழக முதல்வர் இலங்கை தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதைப் பிரதமர் மோடி பரிசீலிப்பார்.

உலக நாயகன் கமல்ஹாசன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது, உலகைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அரசியல் சட்டமும் தெரியாமல், நாடாளுமன்ற நடவடிக்கையையும் தெரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்கிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் குடியிருக்கும் சட்டப்பூர்வ குடிமக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. இதனை விளக்கி கூற பாஜக சார்பில் ஒரு மாதம் இந்தியா முழுவதும் பிரசாரம் இயக்கம் நடைபெற உள்ளது.

இச்சட்டம் பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் தெரியவில்லை என்றால் அவருக்குப் புரியவைப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...