அரசாங்கத்திற்கு எச்சரிக்கும் ஐதேக!! இரண்டு வாரங்களுக்கு ஆட்சியை கைப்பற்ற முயற்சி - சிங்களப் பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்

தொடர்ந்தும் அரசியல் பழவாங்கல்களை செய்து கொண்டிருந்தால் ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு பிணையில் நேற்று முந்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியினர் கடும் விசனமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அரசியல் பழிவாங்கல்களை செய்து கொண்டிருப்பதாகவும், அரசாங்கம் உடனடியாக அரசியல் பழிவாங்கல்களை நிறுத்த வேண்டும்.

இல்லையெனில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து பிரதமர் பதவியை கைப்பற்றுவதுடன் புதிய அமைச்சரவையையும் கொண்டுவருவோம் என்று ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தை இங்கே காணலாம்.

Latest Offers