பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல்

Report Print Rusath in அரசியல்

பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் சமூக அபிவிருத்தி சங்கங்கள், பொதுமக்கள், மற்றும் இளைஞர், யுவதிகக்குமான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட மகளிர் அணித் தலைவி எஸ்.காஞ்சனா, மண்முனை தென் எருவில் பற்று இணைப்பாளர் கு.கணேசலிங்கம், தேற்றாத்தீவு பிரதேச குழு தலைவர்களான ஆர்.சிவகுமாரன், ஈ.இளஞ்செழியன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இளைஞர், யுவதிகள் என பலர் இதன்போத கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகள், இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்புக்கள், சிறிய அளவிலான தொழிற்பேட்டை உருவாக்கம், உள்ளிட்ட பல திட்டங்கள் கலந்து கொண்டோர்களால் அமைப்பாளரிடம் முன்வைக்கப்பட்டு அத்திட்டங்களை ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கும் வகையில் முன்மொழியப்பட்டன.

Latest Offers

loading...