பழிவாங்கல் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுகிறது: சிறீதரன் எம்.பி

Report Print Sumi in அரசியல்

இந்த அரசாங்கம் மீண்டும் பழிவாங்கல் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய உணர்வாளர்களின் குரலினை நசுக்கும் முகமாக அரசாங்கமானது பழிவாங்கல் செயற்பாட்டினை முயல ஆரம்பித்துள்ளது.

எனவே, எதிர்வரும் காலங்களில் தமிழ் தேசிய உணர்வாளர்களின் குரல் வளைகளை நசுக்கும் வகையிலேயே, சிவாஜிலிங்கம் விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த அரசாங்கமானது மீண்டும் பழிவாங்கல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

Latest Offers