ஜனாதிபதியின் திடீர் விஜயம்! திகைத்து நின்ற அரச அதிகாரிகள்

Report Print Varun in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அதன் போது அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஜனாதிபதி மக்களிடம் நேரில் கேட்டு அறிந்துகொண்டார்.

மக்கள் சேவையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மக்கள் இந்த இடத்திற்கு வருகை தந்து பல சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக ஜனாதிபதியிடம் முறையிட்டனர். மக்களின் தேவைகளை புரிந்துக்கொண்டு அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவற்றை புரிந்துகொண்ட ஜனாதிபதி, அதிகாரிகள் எடுக்க வேண்டிய சிறந்த நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

அரச சேவை என்பது மக்களின் சேவை என்றும், தனது ஆட்சியில் அரச சேவை மந்த கதியில் இயங்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Latest Offers

loading...