ராஜிதவை கைது செய்வதில் பலனில்லை: எம்.ஏ.சுமந்திரன்

Report Print Steephen Steephen in அரசியல்

ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்ட வெள்ளை வான் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தாது, அந்த ஊடக சந்திப்பை நடத்திய நபர் சம்பந்தமாக விசாரணை நடத்துவது சிக்கலுக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வெள்ளை வான் கதை என்பது இன்று நேற்று வந்த கதையல்ல. இது எமது சமூகத்தில் சுமார் 10 ஆண்டுகளாக இந்த கதை பேசப்பட்டு வருகிறது.

யாராவது வந்து அந்த செயற்பாடுகளுடன் நான் சம்பந்தப்பட்டுள்ளேன். நானே அதனை செய்தேன் எனக் கூறினால், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

அதனை விடுத்து ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதில் பலனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...