ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர் எனக் கூறி மொறட்டுவை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபருக்கு அழுத்தம் கொடுத்த நபர் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதாக கூறி மக்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடும் நபர்கள் இருப்பார்களாயின் அது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest Offers