இலங்கை வரலாற்றில் இடம்பிடித்த மிகவும் அமைதியான ஜனாதிபதி தேர்தல்

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் அமைதியான ஜனாதிபதி தேர்தல் இம்முறை நடைபெற்றது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

1982ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலே மிகவும் அமைதியானது என பெப்ரல் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான தேர்தல் தொடர்பில் இடைக்கால அறிக்கையை வெளியிட்டு ஊடகங்களிடம் இன்றைய தினம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலுக்கு முன்னரான காலப் பகுதி முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரான காலப் பகுதி வரையில் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.

இம்முறை தேர்தலின் போது மனித படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை.

மேலும் தாக்குதல்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் ஏனைய ஜனாதிபதி தேர்தல்களை விடவும் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்தளவானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.