முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதி!

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெிவிக்கப்படுகின்றது.

குறித்த தனியார் வைத்தியசாலையின் இருதய அவசர சிகிச்சைப் பிரிவில் ராஜித சேனாரட்ன அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ராஜிதவை கைது செய்வதற்காக அவரை பல்வேறு இடங்களிலும் தேடி வருகின்ற நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைவான் கடத்தல் சம்பவம் தொடர்பில் போலியான ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தியதாக ராஜித சேனாரட்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...