சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க 2016ம் ஆண்டு ராஜகிரியவில் வாகனம் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தியமை மற்றும் தப்பிச்சென்றமை போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் குறித்த பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது விபத்துக்கான சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாகவும், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளில் ஹேரத் பிரியதர்சன, அசாத் அஸ்மடாலா, பிரகீத் அபேசிங்க, ரொஹான் மகேஸ், ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் பாட்டலி சம்பிக்கவின் வாகன விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...