சம்பிக்க ரணவக்கவை சிறைக்கு சென்று பார்வையிட்டதை நியாயப்படுத்தும் சபாநாயகர்!

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை பார்வையிடுவதற்காக விளக்கமறியலுக்கு தாம் சென்றமையை சபாநாயகர் கரு ஜயசூரிய நியாயப்படுத்தியுள்ளார்.

சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்ற சம்பிரதாயங்களின்படி கைதுசெய்யப்படவில்லை என்ற காரணத்துக்காகவே அவரை, தாம் பார்வையிட சென்றதாக கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரணவக்கவின் கைது தொடர்பில் தாம் எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தற்போது, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.