மகிந்த ஆட்சியில் வெள்ளை வான் கடத்தல் இடம்பெற்றது எனக்கு நன்கு தெரியும்! விக்ரமபாகு கருணாரத்ன

Report Print Murali Murali in அரசியல்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றதை நான் நன்கறிவேன் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டட அவர்,

“மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றதை நான் நன்கறிவேன். அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் என்னை தொலைபேசியின் ஊடாகத் தொடர்புகொண்டு பேசியுமிருந்தார்.

நாம் அத்தகைய கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டு வந்தோம். எனவே மஹிந்தவின் ஆட்சியில் அத்தகைய சம்பவங்கள் எவையும் நடைபெறவில்லை என்று எவராலும் மறுத்துவிட முடியாது.

இந்நிலையில், வெள்ளை வான் விவகாரம் தொடர்பில் அம்பலப்படுத்திய ராஜித சேனாரத்னவை ஆபத்திற்குள்ளாக்கி, தொடர்ந்தும் வெள்ளை வேன் கலாசாரத்தை நாட்டின் முன்னெடுத்துச் செல்லலாம் என்றும், ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் உடைத்தெறிந்துவிட்டு முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்று ஒருபோதும் கருதவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.