மனித உரிமைகள் கூட்ட தொடருக்கு அரசாங்கம் தயாராகின்றது!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச உறவுகளின் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் சாதாரணமாக பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இருந்து மார்ச் மாத நடுப்பகுதி வரை நடைபெறும்.

தற்போதைய நிலையில் புதிய மக்கள் ஆணையைப் பெற்ற புதிய அரசாங்கம் தற்போது அதிகாரத்திலுள்ளது. எனவே புதிய அரசாங்கத்தின் நிலையை நாம் விளக்கவேண்டும்.

அத்துடன் புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் ஆகியோரின் நிலையையும் நாம் விளக்க வேண்டியுள்ளது. அதேவேளை இலங்கையில் கடந்த முறை இணை அனுசரணை வழங்கிய 30/1 தீர்மானம் பற்றிய தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பற்றியும் நாம் கூறவேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் உதவி இல்லாத நிலையிலும் உலகளாவிய இலங்கை மன்றம் இந்த விடயத்தில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. முன்னர் ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமே இருந்தனர் என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேலும் கூறினார்.